• Jan 18 2025

அஜித்தை அடுத்து சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி-ஷாம்லி.. 24 வருடத்திற்கு முன் ஒரு மலரும் நினைவு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரது படங்களும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் இருவரின் சந்திப்பு நடந்தது என்பதும் இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்தது.

மேலும் அவர் அந்த பதிவில் அஜித்தின் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாக தெரிவித்த நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

இந்த நிலையில் சிரஞ்சீவி - அஜித் சந்திப்பை அடுத்து தற்போது சிரஞ்சீவியை மரியாதை நிமித்தமாக ஷாலினி, அவரது சகோதரி ஷாம்லி, சகோதரர் ரிச்சர்ட் ஆகிய மூவரும் சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ஆம் ஆண்டு சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த தெலுங்கு படம் ஒன்றில் ஷாலினி மற்றும் ஷா,லி ஆகிய இருவரும் இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஷாலினி, ஷாம்லி மற்றும் ரிச்சர்ட் ஆகிய மூவரும் சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர், அந்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் ஷாம்லி, ரிச்சர்ட் ஆகியோர்  பதிவு செய்து மலரும் நினைவுகளை குறிப்பிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவியை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement