• Jun 11 2026

லைஃபை விற்ற இளைஞர்கள்.. இன்ஸ்டா மோகத்தால் நிகழும் விபரீதத்தை எடுத்துரைத்த அஸ்ராணி

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது கவனம் ஈர்த்துள்ள புதிய படம் தான் ‘எல்லோ எல்லோ வேஸ்ட் ஃபெல்லோ’. விக்கி பாஸ்கர் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சஞ்சய் அர்ஜுன்தாஸ் வத்வா இணைந்து தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள டைட்டில் டீசர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

டீசரை பார்க்கும் போது, படம் முழுவதும் இன்றைய இளைஞர்களின் சமூக வலைத்தள வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்கள், அவர்களின் பிரபல வாழ்க்கை, லைக்குகள் மற்றும் ஃபாலோவர்ஸ்களுக்காக நடக்கும் போட்டிகள் போன்ற அம்சங்கள் கலகலப்பாகவும் சாடும் விதத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இளைஞர்களின் தற்போதைய டிஜிட்டல் கலாச்சாரத்தை நகைச்சுவையுடன் சொல்லும் இப்படம், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement