• Jun 11 2026

மன அழுத்தத்துக்கு மருந்து இதுதானா.? இவ்வளவு நாளா தெரியாமல் போச்சே.. செல்வராகவன் பேச்சு

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் செல்வராகவன், வாழ்க்கை மற்றும் மனித உறவுகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிரும் கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், அவர் சமீபத்தில் குழந்தைகள் குறித்து பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, “எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரம் விளையாடி பாருங்கள்; அவர்களுடைய உலகத்திற்குள் நுழைந்து விட்டால் நம்முடைய பிரச்சனைகள் கொஞ்ச நேரத்துக்கு மறைந்து போய்விடும். குழந்தைகளுக்கும் நமக்கும் உள்ள பந்தம் இன்னும் ஆழமாகும்; உலகமே வேற மாதிரி தெரியும்.” என்று அவர் கூறியுள்ளார்.


இந்த வரிகள் பலரின் மனதையும் தொட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அழுத்தம், வேலைப் பளு, குடும்பப் பொறுப்புகள் என பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, குழந்தைகளுடன் செலவிடும் நேரம் ஒரு சிறிய மன நிம்மதியை தரும் என்பதையே செல்வராகவன் எளிமையாக எடுத்துரைத்துள்ளார்.

குறிப்பாக பெற்றோர்கள் பலரும், குழந்தைகளின் சிரிப்பு மற்றும் குறும்புகள் வாழ்க்கையை புதிதாக பார்க்க வைக்கும் என அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சினிமாவை தாண்டியும் வாழ்க்கை அனுபவங்களை உணர்வுபூர்வமாக பகிரும் செல்வராகவனின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement