• Jul 15 2026

நடிகர் ஜெய்யுக்கே இந்த நிலைமையா? பலரும் சொல்ல மறுக்கும் உண்மையை உடைத்த நடிகர்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த பேட்டியில் அவர் தனது ஆன்மீக அனுபவங்கள் மற்றும் மத இடங்களில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.


அவர் கூறுகையில், “நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறேன். அதேபோல் ஜீசஸ்க்காக ஒரு வருடம் விரதம் இருந்த அனுபவமும் உள்ளது. பல்வேறு மத வழிபாட்டு இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அங்கு கிடைத்த அனுபவங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருந்தன.” என்று தெரிவித்துள்ளார். மேலும், கோயில்களில் சென்ற போது தன்னை நடத்தும் விதம் தனித்துவமாக இருந்ததாகவும், சில இடங்களில் மிகுந்த மரியாதை கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், மசூதிக்கு சென்ற அனுபவம் குறித்து பேசுகையில், அங்கு ஆரம்பத்தில் தன்னுடன் யாரும் நேரடியாக பேசவில்லை என்றும், அவர் நடிகர் என்பதை அறிந்த பிறகு மட்டுமே சிலர் வெளியில் வந்து பேசினர் என்றும் கூறியுள்ளார்.

இதனால், அங்கு அனைவரையும் சமமாக பார்க்கும் அணுகுமுறை இருப்பதாகவும், கடவுளை மட்டுமே மையமாகக் கொண்டு நடக்கும் சூழல் இருப்பதாகவும் தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது அனுபவத்தை தனிப்பட்ட பார்வையாக பார்க்கின்றனர், மற்றவர்கள் இது மத உணர்வுகளைப் பற்றிய பொதுவான விவாதத்தை தூண்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement