2000 ஆண்டு கால பகுதிகளில் சாக்லேட் பாயாக திகழ்ந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் பல ரசிகைகளின் கனவு கண்ணனாகவே வலம் வந்தார். அந்த காலப்பகுதிகளில் இவர் நடித்த படங்கள் பெரும் ஹிட் ஆகின. இவர் நடிப்பில் வெளியான பாடல்களும் இன்றளவில் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைந்த பிரசாந்துக்கு அவருடைய வாழ்க்கை துணை சரியாக அமையவில்லை. ஒருசில வருடங்களிலேயே அவருடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் சினிமாவில் இருந்தும் விலகி இருந்தார்.
தற்போது அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் மாஸாக கம்பேக் கொடுத்துள்ளார். அதன் பின்பு இளைய தளபதி விஜய் உடன் நடிக்கும் கோட் திரைப்படமும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. பிரசாந்தை மீண்டும் திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.
அந்தகன் படத்தின் விழா மேடையில் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் பிரசாத்தின் வாழ்க்கை பற்றி மிகவும் கவலையாக பேசி இருந்தார். இனி அவருக்கு திருமணம் செய்துவிட்டு தான் மீதி வேலை எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் தியாகராஜன் மற்றும் அவருடைய மனைவிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பெண் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு விரைவில் பெண் முடிவெடுக்கப்பட்டு திருமணத் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை பிரசாந்தின் முதல் மனைவி கிரஹலட்சுமியுடன் வாழ்க்கை மொத்தமாக மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்ததாம். அவர்களுடைய கல்யாண வாழ்க்கையில் ஏற்பட திடீர் பிரச்சனையால் பிரசாந்த் மீது வரதட்சணை வழக்கை அவரது மனைவி பதிவு செய்துள்ளார். அத்தோடு விவாகரத்து வழக்கும் பதிவிட்டிருந்தார். இருந்தாலும் பிரசாந்த் அவருடைய மனைவியுடன் சேர வேண்டும் என்றே தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் கிரஹலட்சுமி கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என பிரிந்து விட்டாராம்.
 
                              
                             
                             
                             
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!