• Jan 19 2025

ரஹ்மான் சார் என்னை விட க்யூட்டா நடனமாடுவார்.. பிரபல டான்ஸ் மாஸ்டர் சொன்ன வீடியோ.

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞர்கள் AR ரகுமான் மற்றும் பிரபுதேவா ஆவார்கள். இசையில் பல சாதனைகளை செய்து ஆஸ்கார் விருதையும் பெற்ற ரகுமான் , இந்தியாவிலேயே சிறந்த நடன கலைஞர்கள்  பட்டியலில் முதல் இடத்தில் இருப்பத்தோடு  ரசிகர்களால் செல்லமாக இந்தியன் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படும்  பிரபுதேவாவுடன் இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

  இன்றைய தினம் 2024 ஆம்   ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது  நடைபெற உள்ளது . பெண்களுக்கான ஐ.பி.எல் கோப்பையை RCB அணி வென்றதாலும் ,CSK அணியின் தலைவர் மாற்றப்பட்டதாலும் இம்முறை நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.   

 இந்த நிலையில் இன்றைய தினம் ஆரம்பிக்க உள்ள ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு "STAR SPORTS தமிழ்" என்னும் தொலைக்காட்சியினால்   ஒழுங்கு செய்யப்பட்ட  நிகழ்ச்சி ஒன்றிலேயே இருவரும்  கலந்துகொண்டுள்ளனர்.இதில்  இருவரும் பல சுவாரசியமான விடையங்களை பகிர்ந்து கொண்டனர் 

அதிலும் குறிப்பாக" ரகுமான் சார் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டாரு பாத்திங்களா' என்ற கேள்விக்கு "ஆமா நான் பாத்த ரெண்டு ,மூணு சாங்ஸ் பாத்த நல்லா  இருந்துச்சு ரொம்ப கியூட்டா  ஆடினாறு   " எனக்கூறினார் 

அதற்கு ரகுமான் "ஐயோ என்னாலலாம் டான்ஸ் ஆட முடியாது ' என நக்கலாக கூறினார் இவ்வாறு  பல சுவாரசியமான விடயங்களை பகிர்ந்தது   மட்டும் இன்றி இம்முறைக்கான ஐ.பி.எல் தொடரை STAR SPORTS தமிழில் பாருங்கள் என இருவரும் விளம்பரமும் செய்தனர்.


Advertisement

Advertisement