• Jan 18 2025

வயசாயிருச்சு.. இனிமேல் என்னால முடியாது.. ஏஆர். ரஹ்மானின் பேட்டி வீடியோ வைரல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஒரு சில படங்களில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களில் அவர் தொழில்நுட்ப கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது தெரிந்தது.

இந்நிலையில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ’நீங்கள் நடிப்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு அவர் தனக்கு வயசு ஆயிருச்சு இனிமேல் நடிக்க முடியாது என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திற்கு அவருக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்தது என்பதும், அதன் பின்னர் அவர் ரஜினிகாந்த் ,கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்கும் அவர் இசை அமைத்திருந்தார் என்பதும் அது மட்டும் இன்றி ஆஸ்கார் விருதினை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார் என்பதும் தெரிந்தது. 

இந்த நிலையில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்துள்ளார். குறிப்பாக காதல் வைரஸ், பிகில், மாமன்னன் போன்ற படங்களில் பாடல்களின் போது அவர் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி அவர் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தை திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார் என்பதும் அதேபோல் ஒரு படத்தை  அவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது நீங்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு அதெல்லாம் இல்லை எனக்கு நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை, வயசாயிருச்சு என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement