• Sep 16 2025

'யெல்லோ' படத்தில் பட்டைய கிளப்பிய பூர்ணிமா ரவி.! வெளியானது கிளிம்ஸ் வீடியோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக் டாக் போன்ற செயலிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான்  பூர்ணிமா ரவி. இவர் பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். இதனால் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. 

இதைத் தொடர்ந்து 'சிவப்பி' படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார் பூர்ணிமா ரவி.  அதற்கு முன்பே நயன்தாரா நடிப்பில் வெளியான  அன்னபூரணி படத்திலும் நடித்திருந்தார்'  மேலும் இவருடைய நடிப்பில் ட்ராமா படமும்  ரசிகர்களின் கவனம் பெற்றது.

மேலும் பூர்ணிமா ரவி கதாநாயகியாக நடித்திருக்கும் யெல்லோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில்  இயக்குநரும், நடிகருமான  சசிகுமார்  தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். 


அறிமுக இயக்குநரான ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள யெல்லோ படத்தில் பூர்ணிமா ரவி, வைபவ், முருகேசன், சாய் பிரசன்னா, பிரபு சாலமன்,  நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  இந்தப் படத்தை கோவை பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம்  தயாரித்துள்ளது. 

யெல்லோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.  அதில்  பூர்ணிமாவின் தோற்றமும் அவருடைய பின்னணியும்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில், யெல்லோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  பூர்ணிமா ரவிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். 

Advertisement

Advertisement