• Jan 28 2026

பாவம் என் குழந்த.. அவ ரொம்ப டிப்ரெஷன்ல் இருக்கா..! அனைத்தையும் பூசி மெழுகும் வனிதா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது ஒன்பதாவது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.

இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.


இவ்வாறு 60 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி ஜோவிகா தூங்குவது பற்றி நபரொருவர் கேட்ட கேள்விக்கு வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

பிக் பாஸ் வீட்டுல அவ ட்ரெஸ்ட்டா இருக்கா.. எனக்கு தெரியும் அந்த வீட்டுல நானும் இருந்துட்டு தான் வந்து இருக்கன். கொஞ்சம் ட்ரெஸ்ட்டா  இருந்தா தூங்க தான் தோணும்.. அதோட ஜோவிகா கண்ட கனவு அவள தனிம படுத்துடுச்சு..அதால அவ ரொம்ப ட்ரெஸ்ட்டா இருக்கா... என ஜோவிகாவின் தூக்கத்திற்கு விளக்கம் கூறியுள்ளார் வனிதா.


Advertisement

Advertisement