• Sep 01 2025

விவாகரத்திற்கு பிறகு சைந்தவி பகிர்ந்த புகைப்படங்கள்...! இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்...!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

கர்நாடக இசையையும் தென்னிந்திய திரை இசையையும் தன்னுடைய குரலில் நன்கு ஒன்றிணைத்து பாடி புகழ் பெற்றவரே பாடகி சைந்தவி. 12-ஆவது வயதிலேயே இசைப்பயணத்தைத் தொடங்கிய இவர், தமிழ்த் திரைப்படங்களில் பல குறிப்பிடத்தக்க பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


அதற்கிடையில், "அண்டங்காக்கா கொண்டக்காரி", "அச்சுவெல்லம்", "மஞ்சள் முகமே", "யார் இந்த சாலை" போன்ற பல ஹிட் பாடல்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனது தனிச்சிறப்பை ஏற்படுத்தியுள்ளார். சைந்தவியின் பள்ளித் தோழனும் பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமாரை 27 ஜூன் 2013 அன்று சென்னையில் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.


ஆனால், 2024 மே 13 அன்று இருவரும் தங்களது விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட முடிவாக இருந்தாலும், ரசிகர்கள் இருவருக்கும் உற்சாகமான எதிர்காலம் வேண்டி வரவேற்றனர்.


தற்போது, சைந்தவி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டும்,  பல பிரபலங்களும் அந்த படங்களை பகிர்ந்து வரவேற்கின்றனர். சைந்தவியின் இசைப் பயணமும், தனிப்பட்ட வாழ்க்கையையும் தொடர்ந்து எதிர்பார்க்கும் இசை ரசிகர்கள், அவரின் புதிய முயற்சிகளை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.











Advertisement

Advertisement