• Sep 01 2025

பிரம்மாண்ட அறிவிப்பு ஒன் பீஸ் லைவ்-ஆக்ஷன் சீசன் 3 தயாரிப்பில்...!உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Roshika / 2 weeks ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் ரசிகர்களை மயக்கிய பிரபல அனிமே மற்றும் மங்கா பிராஞ்சைஸான One Piece லைவ்-ஆக்ஷன் வடிவில் மீண்டும் நெட்பிளிக்ஸுக்கு வர இருக்கிறது. 2023ஆம் ஆண்டில் வெளியான முதல் சீசன் விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் சீசனின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வெளியீடு, ஜப்பானில் நடைபெற்ற வருடாந்திர One Piece Day விழாவில் அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டாம் சீசன் 2026ஆம் ஆண்டு வெளியாகும் என்றும், மூன்றாவது சீசனும் தற்போது தயாரிப்பில் உள்ளதாக படக்குழு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, ஒன் பீஸ் ரசிகர்கள் இனியும் தொடர் உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கின்றனர்.


புதிய சீசனின் படப்பிடிப்பு, தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கதையின் முக்கிய நாயகர்களான லூபி மற்றும் அவரது குழுவினர் மீண்டும் திரைக்கதை தொடர்வார்களா? அல்லது புதிய நடிகர்கள் வருவார்களா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.


அந்தவேளை, அனிமே ரசிகர்களுக்காக இந்த புதிய அறிவிப்பு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. Eiichiro Oda உருவாக்கிய இந்த மங்கா தொடரின் உலகம், லைவ்-ஆக்ஷனாகவும் வலுவாக முன்னேறி வருவது ரசிகர்களுக்கு ஒரு வரமாக இருக்கிறது

Advertisement

Advertisement