• Jun 24 2024

காணாமல் போன மீனா.. முத்து தலையில் விழுந்த பேரிடி..! போலீஸ் கம்ளைண்ட் கொடுத்த சத்யா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் வீட்டில் மீனாவை முத்து தேட, அவ இங்க இல்லை. போகும் போது சொல்லிட்டா போறா? என்று விஜயா ஏத்தி விடுகிறார். அண்ணாமலை வெளியில பைக் நிக்குது ஆனா மீனாவ காணல என்று சொல்லுகிறார்.

இதை அடுத்து முத்து மீனாவின் அம்மா வீட்டுக்கு போன் பண்ணி மீனா அங்கு இருந்தால் போனை கொடுக்குமாறு சீதாவிடம் சொல்ல, அக்கா இங்கே இல்லை. மதியம் அம்மா ஃபோன் பண்ணும் போது ஒரு மாதிரி கதைச்சா என்று சொல்லுகிறார்.


மீனா காணாமல் போன விஷயத்தை சத்யாவும் சிட்டியிடம்  சொல்ல, அவர் இதுதான் சான்ஸ் என போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் பண்ணுமாறு சத்யாவுக்கு சொல்லுகிறார். அதன்படியே சத்யாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கம்பளைண்ட் பண்ணுகிறார்.

அந்த நேரத்தில் முத்துவும் தனது பொண்டாட்டியை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வர, அங்கு சத்யா இவர் தான் அக்கா புருஷன். இவர் தான் அக்காவ ஏதும் செய்து இருப்பார் அப்படி என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் நடைபெறுகின்றது. எனவே மீனா எங்கே போனார்  என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement