• Sep 28 2024

ஷகிலாவுக்கு விழுந்த பலத்த அடி.. பயில்வானின் இளைய மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்! வைரல் போட்டோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

'முந்தானை முடிச்சு' படத்தில் வைத்தியராக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது சினிமா பத்திரிகையாளரான இவர், நடிகர் நடிகைகள் குறித்தும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அண்மையில் பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதன் பிட்டு படத்திற்கு நடிகைகளை சப்ளை செய்தவர் என்றும், அவர் பத்திரிகை ஆளே இல்லை பலரிடம் காசு வாங்கி பேசுகிறார் என்றும் கடுமையாக திட்டி தீர்த்திருந்தார்.

அது போலவே ஷகிலாவும் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? உங்க பொண்ணு இன்னொரு பொண்ண காதலிக்கிறார் என்று சொன்னதும் பயில்வான் மிரண்டு போயிருந்தார். ஆனாலும் குறித்த சேனல் பலதை எடிட் செய்து தான் அதை போட்டதாக தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதனின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.  நிச்சயதார்த்த போட்டோவை பயில்வான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். பெண் ஒருவனை காதலிப்பதாக கூறிய நிலையில் தற்போது அவருக்கு நிச்சயம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement