• Jan 18 2025

சிம்பு நடிச்சது பத்து தல.. கூல் சுரேஷுக்கு சொட்டத் தல..! இடையில் இர்பான் என்ன பண்ணறாரு?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் கூல் சுரேஷ். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பின்பு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளில் கமிட்டாகி வருகின்றார்.

வாராவாரம் தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை புரமோஷன் செய்து வந்த கூல் சுரேஷ், அண்மையில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சந்தானமும் கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புக்களை கொடுத்து வருகின்றார்.

அத்துடன் சேலம் ஆர் ஆர் பிரியாணி ஓனரான தமிழ்ச் செல்வன் கூல் சுரேஷுக்கு கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.


இந்த நிலையில், கூல் சுரேஷுக்கு உள்ள வழுக்கைத் தலையை மாற்றி ஒட்டிக்கோ கட்டிக்கோ ஸ்டைலில் பிக் வைக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் இர்பான்.

அதில் கூல் சுரேஷ் மற்றும் இர்பான் அடிக்கும் காமெடி காட்சிகளும் சிம்பு நடிச்சது பத்து தல கூல் சுரேஷுக்கு சொட்டைத் தலைன்னு இனிமே யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்க என்று தனது முடிக்கு ட்ரீட்மென்ட் செய்யும் வீடியோவை பகிர்ந்து உள்ளார் கூல் சுரேஷ். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement