சிம்பு
நடித்த
’பத்து
தல’
என்ற
படத்தை
இயக்கிய இயக்குனருக்கு பாலிவுட் பிரபலம் ஒருவரின் படத்தை
இயக்க
வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சிம்பு
நடித்த
’பத்து
தல’
என்ற
திரைப்படம் கடந்த
ஆண்டு
மார்ச்
மாதம்
வெளியான நிலையில் இந்த
படம்
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் ரிலீசுக்கு பின்னர் இந்த
படம்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று
சிம்பு
ரசிகர்களே அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.
வசூல்
அளவிலும் இந்த
படம்
தோல்வி
படமாக
கருதப்பட்ட நிலையில் தோல்விப்படம் கொடுத்த இயக்குனர் கிருஷ்ணாவுக்கு தற்போது பாலிவுட்டின் பிரபல
நடிகர்
அஜய்
தேவ்கன் அடுத்த
படத்தை
இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
பிரபல
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
அவர்களை சந்தித்த இயக்குனர் கிருஷ்ணா ஒரு
கதை
கூறியதாகவும் அந்த
கதை
அட்டகாசமாக இருப்பதை அடுத்து அவர்
இந்த
படத்தை
பாலிவுட்டில் தயாரிக்கலாம் என்று
ஐடியா
கூறியதாகவும் கூறப்படுகிறது. அதர்
பின்னர் அஜய்
தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஞானவேல் ராஜா
கிருஷ்ணாவை அவரிடம் அனுப்பி கதை
சொல்ல
சொன்னதாகவும், அந்த
கதையை
கேட்டு
அஜய்
தேவ்கன் ஆச்சரியப்பட்டதாகவும் கண்டிப்பாக இந்த
படத்தில் நான்
நடிக்கிறேன் என்று
வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த
படத்தின் ஆரம்பகட்ட பணிகளை
கிருஷ்ணா தொடங்க
உள்ளதாகவும் இந்த
படத்தின் படப்பிடிப்பு அடுத்த
மாதம்
நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த
படத்தில் நடிக்கும் நாயகி
உட்பட
ஒரு
சில
நடிகர்கள் தமிழ்
திரை
உலகத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
தோல்வி
படம்
கொடுத்த கிருஷ்ணாவுக்கு தற்போது பாலிவுட் பிரபலத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த
வாய்ப்பை அவர்
சரியாக
பயன்படுத்தி சூப்பர் ஹிட்
படத்தை
கொடுப்பாரா? என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!