• Nov 25 2024

’ஜெயிலர் 2’ படத்தின் நாயகி நயன்தாராவா? அப்ப ரம்யா கிருஷ்ணன் என்ன ஆச்சு?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த வெற்றியை அடுத்து  ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த கார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்தார் என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க அவர் நெல்சனிடம் கேட்டுக் கொண்டதாகவும் செய்து வெளியானது.

இந்த நிலையில் தற்போது நெல்சன்ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதி வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் பேட்டி அளித்தஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினியின் ம்ருமகளாக நடித்திருந்த மிர்ணா என்பவர் கூறிய போதுஜெயிலர் 2' படத்தின் திரைக்கதை அட்டகாசமாக உருவாகி வருவதாகவும் ஆனால் அதில் முதல் பாகத்தில் இருப்பவர்கள் முழுவதும் இருப்பார்களா என்பது எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.



இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படிஜெயிலர் 2' திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு 2 ஜோடிகள் என்றும் அதில் ஒருவர் நயன்தாரா என்றும் இன்னொருவர் பாலிவுட் பிரபலம் என்றும் கூறப்படுகிறது. ’ஜெயிலர்' முதல் பாகத்தில் ரஜினிகாந்த் மனைவியாக ரம்யா கிருஷ்ணன், மகனாக வசந்த் ரவி மற்றும் மருமகளாக மிர்ணா நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நயன்தாரா மற்றும் பாலிவுட் நடிகை ஜோடியாக நடிப்பதால் முற்றிலும் வேறு கதையாக இருக்குமா என்ற சந்தேகம் தற்போது ரஜினி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வேறு சில முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்தது போல் இரண்டாம் பாகத்திலும் சிறப்பு தோற்றத்தில் மாஸ் நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில்ஜெயிலர் 2' திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் முன்னே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement