• Mar 13 2026

கரூர் வழக்கு: விஜயிடம் இன்று மீண்டும் CBI விசாரணை..!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கரூர் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயை, சிபிஐ  இன்றைய தினம் மீண்டும் விசாரணை செய்ய உள்ளது. கடந்த வாரம் டெல்லியில் சுமார் ஏழு மணி நேரம்  நடைபெற்ற விசாரணையில் விஜய் அளித்த வாக்கு மூலங்கள் மற்றும் கட்சியின் பிற நிர்வாகிகள் வழங்கிய தகவல்களை ஒப்பிட்டு கூடுதல் விளக்கங்கள் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்தது, கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டதா, போலீஸ் அறிவுறுத்தல்களை கேட்டாரா,  அவருக்கு பேசுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம் உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. 

எனினும் அதற்கு விஜய் போதிய பாதுகாப்பு மற்றும் கூட்ட கட்டுப்பாடு வழங்கப்படவில்லை என பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த நிலையில், இன்றைய தினம் சிபிஐ தனி அறையில் ரகசிய முறையில் விசாரணையை நடத்த உள்ளதாகவும், இந்த வழக்கில் தீவிர அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இதுகுறித்த மேலதிக தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement