விடாமுயற்சி அப்டேட் கொடுத்தால் என் ஓட்டு உங்களுக்கு தான் என டொனால்டு டிரம்பிடம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார் அஜித் குமார் ரசிகர் ஒருவர். மதுரையை சேர்ந்த அவருக்கு டிரம்பிடம் இருந்து பதில் வரவே அதை பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் அப்படியே தலையே சுத்திருச்சு.
விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கவே அஜித் ரசிகர்கள் தவமாய் தவமிருந்தார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனத்திடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் தான் லைகாவிடம் கேட்டது போன்று என்று அஜித் ரசிகர் ஒருவர் வேற மாதிரி யோசித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிடம் கேட்டுவிட்டார்.
விடாமுயற்சி ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்தால் நானும், என் பசங்களும் மதுரையில் இருந்து வந்து உங்களுக்கு ஓட்டு போடுவோம் டிரம்ப் என வருத்தப்படாத வாலிபர் சங்க பட வீடியோவுடன் தெரிவித்தார். அதை பார்த்தவர்களோ, இந்த அஜித் ரசிகருக்கு சேட்டைய பார்த்தியா, டிரம்பிடம் போய் விடாமுயற்சி அப்டேட் கேட்டிருக்காரே. அந்த மனுஷனுக்கு வேறு வேலை இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சமூக வலைதளவாசிகள் அதிரும்படி டொனால்டு டிரம்பிடம் இருந்து பதில் வந்தது. அதில் விடாமுயற்சி அப்டேட் இல்லை அமெரிக்க அதிபர் தேர்தல் அப்டேட் தான் இருந்தது. டிரம்பின் டீம் சிலருக்கு இப்படி ஆட்டமேட்டிக் மெசேஜ் அனுப்புகிறது. அது தான் அந்த அஜித் ரசிகருக்கும் வந்திருக்கிறது. இந்த விடயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
If you can give #VidaaMuyarchi release date update
Me and boys from Madurai will come and vote for you da trump: pic.twitter.com/XXg2IaD4e7 https://t.co/0vvyoW1PzO
Listen News!