சுதா கெங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ,ஸ்ரீலீலா ,அதர்வா ,ஜெயம்ரவி நடித்து வரும் "பராசக்தி " திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. 1965 களில் இடம்பெற்ற உண்மை கதையினை மையமாக வைத்து இப் படம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "ஜனநாயகன் " திரைப்படத்தின் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.இப் படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கபப்ட்டிருந்தது. "பராசக்தி " திரைப்படக்குழுவும் அடுத்த ஆண்டு வெளியிட தீர்மானித்திருந்தது.
ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் வேண்டுகோளிற்கிணங்க படத்தினை இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிட தீர்மானித்துள்ளனர். துப்பாக்கி கொடுத்தவரும் துப்பாக்கி வாங்கியவரும் ஒரே நாளில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் தற்போது அது நடைபெறாமல் போயுள்ளது.இருப்பினும் இது குறித்து எதுவித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!