• Apr 26 2026

மாடர்ன் உடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! புது ஸ்டைலில் ஜொலிக்கும் பாக்கியாவை பார்த்தீர்களா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. 

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவன் இல்லாமல் குடும்பத்தை தனது சொந்த செலவில் பார்த்துக் கொள்ளும் தைரியமான பெண் குறித்தே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு வழியாக கோபி ராதிகாவைத் திருமணம் செய்திருந்தாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றார். பாக்கியா வீட்டில் இருந்த போது இருந்த சுதந்திரம் எதுவும் இல்லாமல் ராதிகா வீட்டில் அடிமை போல இருந்து வருகின்றார்.


இந்த சீரியலில் பாக்கியா என்னும் கதாப்பாத்திரத்தில் சுசித்ரா என்பவர் நடித்து வருகின்றார். இவர் இது தவிர பிற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான் எனலாம். 

இந்த நிலையில், தற்போது சுடிதார் அணிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதுவரை சாரியில் பாக்கியாவை பார்த்த ரசிகர்களுக்கு, இது புது ஸ்டைலாக உள்ளது. 


Advertisement

Advertisement