• Dec 03 2024

தமிழ் நாடா? இல்ல டுபாயா? பிரதீப் ஷோ பத்தி இதான் சொன்னான்! R J Bravo's interview after biggboss

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆர் ஜே ப்ரோவோ, தற்போது தனது பேட்டியை வழங்கியுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என பார்ப்போம் வாங்க.

அதன்படி அவர் பிரதிப்புடன் பேசிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதுல, பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே வந்த பிறகு நான் பிரதீப்புக்கு கால் பண்ணி பேசினேன். ஆனா இந்த விஷயம் பற்றி எதுவும் பேசல. நார்மலா பிரண்ட்ஸ் எப்படி பேசுவாங்களா அது போல தான் நாம பேசிக்கிட்டோம்.

நான் என்னடா எப்படி இருக்கிற? படம் நடிச்சியா? என்று அவன்ட லைப் பற்றி கேட்க, அவனும் என்ன பத்தி விசாரிச்சு என்ன லைப் பற்றி கேட்டான்.


பிறகு பொங்கல் சாப்பிடலாம் வா என்று ரொம்ப பாசமா வீட்டுக்கு கூப்பிட்டான்.ஆனாலும் இந்த ஷோ பத்தி நானும் கதைக்கல அவனும் கதைக்கல.

அப்புறம் இப்ப நீ வெளியில வந்துட்ட, ஆனா தமிழ்நாட்டுல இருக்க போறியா டுபாயில் இருக்க போறியா என்று பிரதீப் கேட்டான். நானும் அதை பத்தி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்.

நீ அடுத்து டைரக்டர் ஆக போற.. எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கோ. எதுவும்னா சொல்லு எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம் என்ற மாதிரி நானும் சப்போர்ட்டா சொல்லி இருந்தேன் என்றார்.

Advertisement

Advertisement