• Sep 12 2025

வேட்டுவம் படப்பிடிப்பு விவகாரத்தில் அதிரடித் திருப்பம்.. பிணையில் விடுதலையான பா.ரஞ்சித்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற கலைத்திறனுக்காக அறியப்படும் இயக்குநர் பா.ரஞ்சித், தனது புதிய திரைப்படமான "வேட்டுவம்" படப்பிடிப்பால் தற்போது ஒரு விவாதத்திற்கு மையமாக மாறியுள்ளார்.


படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, அதில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம், திரையுலகையும், பொது மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்த சம்பவம் தொடர்பாக தற்போது, கீழையூர் காவல் நிலையத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கீழ்வேளூர் நீதிமன்றத்தில் தற்பொழுது ஆஜரான பா.ரஞ்சித்தை, நீதிபதி பிணையில் விடுதலை செய்துள்ளார். ஏற்கனவே 3 பேர் முன்ஜாமின் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement