மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட் திடலில் நேற்று நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் பிரபல நடிகர் அஜித் குமார் தலைமை தாங்கிய அணி சிறப்பாக பங்கேற்று GT3 பிரிவில் 4வது இடத்தை பதிவு செய்துள்ளது.

உலக தரத்திலான ரேஸிங் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் இவ்வளவு உயர்ந்த நிலையில் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் அஜித் குமார் பல வருடங்களாக ரேஸிங்கில் பங்கேற்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் சிலர் மட்டுமே இத்தகைய இன்டர்நேஷனல் GT3 ரேஸிங்கில் கலந்துகொள்ளும் நிலையில், அஜித் குமார் தனது அனுபவம் மூலம் இந்த பந்தயத்தில் அசத்தினார்.

அஜித் குமார் மலேசியா பந்தயத்தில் பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியான தருணத்திலிருந்து, சமூக வலைத்தளங்களில் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. அஜித்தின் படங்கள், வீடியோக்கள் என்பன வைரலாகி வந்தன. இந்நிலையில், தற்பொழுது வெளியான தகவல் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
Listen News!