சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 சீசன் தற்போது டெலிகாஸ்ட் ஆகி வருகின்றது. இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமானவர்கள் அதிகமாக களம் இறக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் வாட்டர் மெலன் ஸ்டார் எனப்படும் திவாகர் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ஓரளவு மக்களின் ஆதரவை பெற்றார்.
பிக் பாஸில் ஒரு மாதத்திற்கு மேலாக தாக்கு பிடித்த திவாகர், ஒரு சில செயற்பாடுகளின் காரணமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்து எலிமினேட் ஆனார். அவர் வெளியேறியதும் பிக் பாஸ் பற்றியும், தான் தமிழ் சினிமாவை காப்பாற்றப் போவதாகவும் பெருமை பேசி வருகின்றார்.

இந்த நிலையில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் என்ட்ரி கொடுத்த ஆதிரை, திவாகர் வெளியேறுவதற்கு வினோத் தான் காரணம் என்ற வகையில் பேசி இருந்தார் .
இவ்வாறான நிலையில் தொலைபேசியில் ஒருவருடன் உரையாடிய திவாகர் கூறுகையில், ஆதிரை உள்ளே சென்று வினோத் பற்றிய விஷயத்தை Blast பண்ணியது எனக்கு சந்தோஷம் தான். பிக் பாஸில் இருக்கும் போது 100% என்னுடன் பகையாளியாக தான் இருந்தார் வினோத் .

பிக் பாஸில் இடம் பெற்ற டாஸ்க்கில் எல்லாம் எனது நிழலாக தான் அவர் இருந்தார். இதனை வியானா, விக்ரம் உட்பட பலரும் தெரிவித்திருந்தனர். அத்துடன் நான் நடிப்பதன் மூலம் பிரபலமாக காணப்படுகின்றேன். ஆனால் வினோத் என்ன திறமை வைத்துக் கொண்டுள்ளார். எனக்கு தான் நிறைய பேன்ஸ் இருக்காங்க.. அவங்க எனக்காக உயிரை கொடுக்கவும் தயாரா இருக்காங்க..
நான் பிக் பாஸ் இல் இருக்கும்போது மக்களை மகிழ்வித்தேன். ஆனால் இப்போது அப்படி எதுவும் சீன் நடக்கவில்லை என்று சின்ன பிள்ளை முதல் பெரியவர்கள் வரை என்னிடம் சொல்கின்றார்கள். இவ்வாறு நான்தான் நடிப்பு அரக்கன் என்று தன்னை பற்றி பெருமையாக பேசி உள்ளார்
தற்போது அவர் கானா வினோத் பற்றி பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் உண்மையிலேயே மெய்யழகனாக நாங்கள் இருக்கவில்லை. அதற்கு பின்னால் அவருடைய பகை மட்டும் தான் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
Listen News!