பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி, நிகழ்ச்சியில் தனது தனித்துவமான நடத்தை காரணமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷன் செய்யப்பட்ட பிறகு, சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பங்கேற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் தொடரவில்லை. சீரியல்கள் மற்றும் supporting roles மட்டுமே கிடைத்ததால், அவரது திரையுலக பாதை தடுமாற்றம் அடைந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஜூலி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார். அவர் தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் அவரது நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற பிறகு, ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் ஜூலி அழகாக உடை அணிந்து காணப்படுகின்றார். ஆனால், தன்னுடைய வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிரவில்லை.

புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அவருடைய கணவர் ஒருவேளை இஸ்லாமியர் ஆக இருக்கலாம் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வைரலான கிளிக்ஸ் இதோ.!
Listen News!