• Apr 15 2026

நீ எவ்ளோ தைரியமானவள்… ஆனாலும் மனசு வெறுத்துட்டா.! –ராஜலட்சுமி குறித்து பிரபல நடிகை பகீர்

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை மற்றும் திரையுலகில் தனித்துவமாக இடம்பிடித்த நடிகை ராஜலட்சுமி, வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று தற்கொலை செய்திருந்தார். இந்த சம்பவம், திரையுலகில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


சீரியல் உலகில் தனது திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ராஜலட்சுமி மறைந்த செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நடிகர்கள் மற்றும் சக தொழிலாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜலட்சுமியின் மறைவு குறித்து தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


கம்பம் மீனா தனது பதிவில், "ஏன் ராஜி இப்படி பண்ணின…. என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தான் தீர்வா...? நீ எவ்ளோ தைரியமான பொண்ணு, எவ்ளோ போல்டா எல்லாத்தையும் பேசுவ… நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே… என் பொண்ணுக்கு சடங்கு பங்க்சன்க்கா இன்விடேசன் குடுக்கனும் வர்றேங்கானு சொன்னியே… இப்ப உன் பொண்ண பத்திகூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே ராஜி… மனசு வலிக்குது…

என்னதான் தைரியமானவங்களா இருந்தாலும் மனசு வெறுத்துட்டா அவ்ளோ தானா… வாழவும் விடாத சாகவும் விடாத இந்த கேடு கெட்ட சமூகத்துல வாழவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா… ஒருத்தர மிதிச்சு ஒருத்தர கெடுத்து தான் முன்னேற முடியும்ங்கிற சமூகம் வேணாம்னு இந்த முடிவு எடுத்துட்டியா…? எப்படி இருந்தாலும் நீ தைரியமானவள் தான்… ஏன்னா… தன் உயிரை மாய்ச்சுகிறதுக்கும் தைரியம் வேணும்ல… சரி ராஜி அங்கபோயாவது நிம்மதியா இரு… உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்…"என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவில், கம்பம் மீனா தனது நண்பரின் தற்கொலை சம்பவத்தை எதிர்கொள்ள முடியாமல் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement