• Jan 26 2026

பந்தயத்தின் போது பழுதாகி நின்ற அஜித் கார்... பரபரப்பான சூழலை சமாளித்த நடிகர்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர் மற்றும் பிரபல கார் பந்தய ஆர்வலர் அஜித் குமார், தற்போது மலேசியாவில் நடந்து கொண்டிருக்கும் Asian Le Mans Series (ALMS) கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அஜித் தனது அசாதாரண திறமையை மீண்டும் நிரூபித்து வருகிறார்.


அஜித், இந்த 12 மணி நேரத் தொடரில் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து, தன்னுடைய அணி சார்பாக போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருடைய அணியின் செயல்திறனை அதிகரிக்க வித்தியாசமான யுக்தியை அவர் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த யுக்தியில் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு கார்களை தனது அணி சார்பாக பயன்படுத்தி வருகிறார். இதில், அஜித் மற்றும் நரேன் இணைந்து ஒரு காரை ஓட்டுகின்றனர், மற்றொரு காரை அவருடைய அணி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஓட்டுகிறார்கள். இதன் மூலம் அஜித், தன்னுடைய அணியை முன்னிலை பெற வைக்கும் வகையில் பயிற்சியும், தந்திரமும் பயன்படுத்துகிறார்.


போட்டியின் போது பரபரப்பான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அஜித் பங்கேற்ற கார் திடீரென பழுதாகி நின்றது. இதனால் அந்த சூழல் சற்று பரபரப்பாக காணப்பட்டது. 

எனினும், அஜித் குறுகிய நேரத்தில் கார் பழுதை சரிசெய்து மீண்டும் ஓட்டத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement