• Jan 22 2026

பையனுக்கு பீஸ் கட்டவே காசில்லாமல் இருந்தாரு.. நாஞ்சில் சம்பத் பற்றி ஆர்ஜே.பாலாஜி ஓபன்டாக்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரையுலகிலும், அரசியல் துறையிலும் பல வருட அனுபவம் கொண்ட மூத்த அரசியல்வாதி மற்றும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தனது அரசியல் பயணத்தில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளார். திமுக, மதிமுக, அதிமுக போன்ற பல முக்கிய கட்சிகளில் சேவை செய்த நாஞ்சில் சம்பத், கடந்த டிசம்பர் 6 அன்று, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


இந்நிலையில், நடிகர் ஆர்ஜே பாலாஜி சமீபத்திய பேட்டியில் நாஞ்சில் சம்பத் பற்றி சில தகவல்களைக் கூறியுள்ளார். அவர் கூறியதன் படி, "நாஞ்சில் சம்பத் பற்றி நிறைய அரசியல் விமர்சனங்கள் வருகின்றன. நான் LKG படத்தில் அவரை நடிக்க வைக்க அவரது வீட்டுக்கு கேட்க போன போது, அவர் குட்டி வீட்டிலிருந்தார். நான் ஆச்சரியப்பட்டேன்.

படத்தில நடிக்கிறீங்களான்னு கேட்ட போது, என் பையனுக்கு பீஸ் கட்டுவீங்களான்னு கேட்டார். இப்போ இருக்கிற அரசியல் வாதிகள் காலேஜ் கட்டும் போது, 40 வருசமா அரசியலில இருக்கிற ஒருத்தர் மகனுக்கு பீஸ் கட்டுவீங்களான்னு கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது." என்று கூறினார்.


நாஞ்சில் சம்பத், அரசியலில் பல வருட அனுபவம் கொண்டவர். சமீபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் ஊக்கமடைந்துள்ளன. இந்நிலையில், ஆர்ஜே பாலாஜி கூறிய கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement