• Jul 21 2025

விக்னேஷ் சிவனால் ஏற்பட்ட புதுச் சிக்கல்... அதிருப்தியில் நயன்தாரா..!

luxshi / 4 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு தொடர்ச்சியான சர்ச்சைகள் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் இயக்கும் புதிய திரைப்படம் வெளியீட்டு தாமதம் காரணமாக, நடிகை நயன்தாரா கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக, அஜித் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், அந்த வாய்ப்பை இழந்தார். அதையடுத்து அரசுக்கு சொந்தமான நிலம் வாங்கும் முயற்சியில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நயன்தாரா தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு அளித்து, 'லவ்  இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


முதலில், இந்த படம் செப்டம்பர் 18 – விக்னேஷ் சிவனின் பிறந்த நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் முழுமையாக முடியாததால், பட வெளியீடு தாமதம் அடைந்துள்ளது.

தற்போது படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், போட்டியின்றி செப்டம்பர் 18 அன்று தனிப்பட்ட ரிலீஸை திட்டமிட்டிருந்த நயன்தாரா, தற்போது வெளியீட்டு மாற்றம் மற்றும் எதிர்கால போட்டி சூழ்நிலை காரணமாக மிகுந்த பதட்டத்துடன் உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் மீது அதிருப்தியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



Advertisement

Advertisement