• Sep 21 2024

ஷங்கர், அட்லியை விட அதிகமாக நெல்சன் கேட்ட சம்பளம்.. ஓகே சொன்ன சன் பிக்சர்ஸ்..

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ’ஜெயிலர் 2’ படத்திற்காக நெல்சன் கேட்ட சம்பளம் ஷங்கர் மற்றும் அடலியை விட அதிகம் என்றும் அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் யோசிக்காமல் உடனே ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் ஆகும் இயக்குனர் ஷங்கர் என கூறப்பட்டு வருகிறது.  அவர் ஒரு படத்திற்கு 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. அதேபோல் ’ஜவான்’ படத்திற்காக இயக்குனர் அட்லி 30 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அடுத்த படத்திற்கு அவர் 50 கோடி சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’ஜெயிலர் 2’ படத்திற்காக நெல்சன் 60 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உடனே ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதனை அடுத்து பட வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

’ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்ததால் தான் நெல்சனுக்கு இவ்வளவு பெரிய சம்பளத்தை கொடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ’ஜெயிலர் 2’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றால் நெல்சன் சம்பளம் 100 கோடிக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement