பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருப்பதும் கூடுதல் ஹைப்பை உருவாக்கியுள்ளது. காதல் மற்றும் பேன்டஸி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ‘அடாவடி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த பாடலின் இசை மற்றும் அதிரடி பீட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் மகன்கள் இந்த பாடலுக்கு ‘vibe’ செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் சின்னச் சின்ன அசைவுகளுடன் பாடலுக்கு இணைந்து மகிழ்ச்சியாக விளையாடும் அந்த காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருவதுடன், “க்யூட் மோமெண்ட்” என்று பதிவு செய்து வருகின்றனர். இப்படம் வெளியாவதற்கு முன்பே இத்தகைய வைரல் தருணங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!