• Jun 07 2026

ஜி.வி. பிரகாஷை பாராட்டித் தள்ளிய தனுஷ்! 'ஹாப்பி ராஜ்' படத்தில் அப்படி என்னதான் இருக்கு?

shali / 2 months ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஹாப்பி ராஜ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம், மதுரை முத்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்பாஸ் இந்தப் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.


கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், தனுஷ் இப்படத்தை பார்த்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “நான் ‘ஹாப்பி ராஜ்’ படத்தை பார்த்தேன். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரிடமிருந்து வந்திருக்கும் இந்த திரைப்படம் மிகவும் வேடிக்கையாகவும், அதே சமயம் எதிர்பாராத விதமாக மனதைத் தொடும் வகையிலும் அமைந்துள்ளது. படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என பாராட்டியுள்ளார்.

தனுஷின் இந்த பாராட்டு, படக்குழுவினருக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், இப்படம் இன்னும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement