• Dec 03 2024

கனடாவிலும் கடைவிரித்த நயன்தாரா.. சினிமா மார்க்கெட் வீழ்ந்ததால் இனி பிசினஸில் கவனம்..!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா சமீபத்தில் 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பிசினஸை தொடங்கினார் என்பதும் அந்த பிசினஸ் தற்போது இந்தியாவில் உள்பட பல நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. 

இதனை அடுத்து உலகம் முழுவதும் தனது 9 ஸ்கின் பிசினஸை விரிவுபடுத்த நயன்தாரா முடிவு செய்துள்ளதாகவும் இதனை அடுத்து தற்போது கனடாவில் தனது பிசினஸை ஸ்டார்ட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பெண்களின் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நயன்தாரா இந்தியாவில் உள்ள பல பகுதிகளிலும் ஷோரூம் அமைத்துள்ளார் என்பதும் இந்திய பெண்கள் மத்தியில் அவரது பியூட்டி தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


நாளுக்கு நாள் அவருடைய தயாரிப்பு பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அடுத்த கட்டமாக சிங்கப்பூர், மலேசியா உள்பட கிழக்கு நாடுகளில் தனது பிசினஸை அறிமுகம் செய்த நயன்தாரா அங்கு நேரடியாக சென்று புரமோஷன் செய்தார் என்பதும் அதன் காரணமாக கிழக்கு நாடுகளிலும் அவரது தயாரிப்பிற்கு தற்போது நல்ல விற்பனை கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. 

இதனை அடுத்து நயன்தாரா தற்போது கனடாவிலும் தனது 9 ஸ்கின் தயாரிப்பு பொருள்களை அறிமுகம் செய்துள்ளார். கனடாவில் ஏராளமான இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இருப்பதை அடுத்து அவரே நேரடியாக கனடா சென்று தனது தயாரிப்பு பொருட்களை புரமோஷன் செய்துள்ளார்.


இது குறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஹலோ கனடா’ என்று புகைப்படத்தை பதிவு செய்து அதில் தனது தயாரிப்பு பொருட்களையும் புரமோஷன் செய்துள்ளார். மற்ற நாடுகளைப் போலவே கனடாவிலும் அவரது தயாரிப்பு பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கனடாவில் இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்னும் சில நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கனடாவை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், உலகம் முழுவதிலும் தனது பிசினஸை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் அதற்கு அவரது கணவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


நயன்தாராவின் சமீப காலத்து படங்கள் தோல்வியை பெற்று வருவதை அடுத்து அவர் இன்னும் ஒரு சில வருடங்களில் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என்றும் திரைப்படங்களை தயாரிப்பதில் மட்டும் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னொரு பக்கம் தனது 9 ஸ்கின் தயாரிப்பு பொருட்களை தயாரிப்பு பிசினஸை விரிவுபடுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

 வருங்காலத்தில் அழகு சாதன பொருட்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு மகளிர் மத்தியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மிகச் சரியாக அவர் தனது சினிமா மார்க்கெட் முடியும் நேரத்தில் இந்த பிசினஸை தொடக்கி உள்ளதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் முழுக்க முழுக்க இந்த பிசினஸில் தான் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் சினிமாவில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவருக்கு பணம் கொட்டிக் கொண்டே தான் இருக்கிறது என்றும் அவர் தொடங்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றி கரமாக சக்சஸ் ஆகி வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement