• May 21 2024

நயன்தாரா தனது திருமணத்தின் மூலம் இவ்வளவு சம்பாதித்துள்ளாரா-ஷாக்கான ரசிகர்கள்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையைாக திகழும் நயன்தாரா 7வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.இவர்களுக்கு நாளைய தினம் பிரமாண்டமாக மகாவலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இத்திருமண நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் பங்குபற்றவுள்ளதாக கூறப்படுகின்றது. விறுவிறுப்பாக திருமண ஆயத்தங்கள் நடந்து வரும் நிலையில் இன்று மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது.மேலும் திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா தங்களின் திருமண விழாவின் மூலம் சம்பாதித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திருமண விழாவை கவரேஜ் செய்யும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்து அதிலும் காசு பார்ப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் எத்தனை கோடி ரூபாய்க்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் திருமண விழா கவரேஜ்ஜை உரிமையை விற்பனை செய்துள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண விழாவை 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். மேலும் இதனை இயக்குநர் கவுதம் மேனன்தான் காட்சியாக்கி கொடுக்கிறாராம். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது தகவல் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement