• Apr 26 2024

கமலுடன் இணையும் 90 கால கட்ட காமெடி நடிகர்..யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம்.இப்படம் வசூலில் வேட்டையாடி வருகின்ற நிலையில் கமல் ஹாசன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று பலருடைய மனதில் கேள்வி எழுந்துள்ளது.

கமலின் அடுத்த படத்தை மலையாள திரைப்பட இயக்குநர் மகேஷ் நாராயணன்‌ இயக்கவுள்ளதாக அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார். மகேஷ் நாராயணன்‌ - கமல் இணையும் படத்திற்கு கமல் ஹாசன் திரைக்கதையை எழுதுகிறாராம்.

மேலும் சில வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் தேவர் மகன் 2 படத்தை தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், சில காரணங்களால் அப்போது அப்படம் நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது இப்படத்தை கமல் ஹாசன் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

இப்படத்தை தான் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளாராம். இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

எனினும் இதற்குமுன், வெளிவந்த தேவர்மகன் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி இதன்பின் வெளிவந்த சிங்காரவேலன் படத்தில் இருவரும் இணைந்து செய்த நகைச்சுவையை நம்மால் மறக்கவே முடியாது. இந்த கூட்டணி அமைகிறதா? இல்லையா? என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement