• Mar 20 2026

தீ பரவியதா.? 100 கோடி கிளப்பில் இணைந்த பராசக்தி..! கொண்டாட்டத்தில் படக்குழு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கார இயக்கத்தில் வெளியான பராசக்தி படம் கடந்த பத்தாம் திகதி ரிலீசானது. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.  மதராஸி  படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.

பராசக்தி படத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான கேரக்டரில் போராளியாக நடித்துள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 வது படமா அமைந்துள்ளது.  மேலும் இதில் இந்தியை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இயக்குனர் எடுத்துக்காட்டியுள்ளார்.


இந்த படத்தில் ரவி மோகன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.  இந்த படம் வெளியான பின்பு முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. திரையரங்குகள் எல்லாம் காத்து வாங்குவதாக கூறப்பட்டது.  மேலும் படத்தின் இயக்குனரும் விஜய் ரசிகர்களுக்கு எதிராக பேசியிருந்தார்.

இந்த நிலையில்,  பராசக்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகார்வபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.  இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக காணப்படுகிறது.


Advertisement

Advertisement