நடிகர் நாக சைதன்யா வும் சோபிதா துலிபாலாவும் நேற்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். குடும்பம், நெருங்கிய நண்பர்கள், பிரபலங்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சைதன்யாவின் முதல் மனைவியான சமந்தா போட்டஇன்ஸ்டாகிராம் ஸ்டோரி அணைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமந்தா ஒரு இன்ஸ்டா ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான வயோலா டேவிஸ் முதலில் வெளியிட்ட வீடியோவை சமந்தா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ஒரு சிறுமி தனது எதிரியான சிறுவனுடன் சண்டையில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிறுவன் அழுது கண்ணீர் சிந்த, சிறுமி சண்டையில் வெற்றி பெறுவதுடன் வீடியோ கிளிப் முடிகிறது. #FightLikeAGirl என்ற ஹேஷ்டேக்குடன் சமந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ அவரது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு சார்பாக போடப்பட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சமந்தா தனது சமூக வலைதளங்களில் இன்னும் நாக சைதன்யாவின் படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருக்கிறார்.அதனை நீக்க சொல்லியும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
Listen News!