திரையுலகில் தனித்துவமான நடிப்பு, வித்தியாசமான வெளிப்பாடு, வினோதமான கதாபாத்திரங்களின் இயக்கத் திறமை ஆகியவற்றால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் எஸ்.ஜே. சூர்யா, சமீபத்தில் அளித்த நேர்காணல் காரணமாக மீண்டும் வைரல் ஆகி வருகிறார்.

இவர் கூறிய கருத்துகள், அவரது வாழ்வின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியதோடு, ரசிகர்கள் இதுவரை அறியாத பல உண்மைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளன. நேர்காணலில் அவர்," என் பெயர் எஸ்.ஜே.சூர்யா. எங்க அப்பா எனக்கு வைத்த பெயர் ஐஸ்டீன்.

நான் ஒரு கிறிஸ்டியன். எஸ்.ஜஸ்டின் சூர்யா தான் என்னோட பெயர். ஜீசஸ் கடவுளாக பிறந்தவர். தன்னைப் போல பிறரையும் நேசி, ஒரு கன்னத்தைக் காட்டினால் மறு கன்னத்தைக் காட்டுனு சொன்னவர். இன்னக்கி இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கிக் கொடுத்ததே அந்த அங்கீகாரம் தான்." எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!