• Dec 19 2025

28 கோடி கடனால் தள்ளிவைக்கப்பட்ட ‘அகண்டா 2’.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருந்த படங்களில் ஒன்று பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா 2’. முன்னதாகவே, ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் இதனை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். 


பல வருடங்களுக்குப் பின் வந்த இந்தப் படம், முன்னாள் அகண்டா படத்தின் வெற்றியை மீண்டும் தொடரும் வகையில் உருவாக்கப்பட்டதாக இருந்தது.

அகண்டா 2, இன்று திட்டமிட்ட படி வெளியாக வேண்டியிருந்தது. படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியானதும், ரசிகர்கள் பலர் ஆவலுடன் திரையரங்கில் இருந்தனர். ஆனால், எதிர்பாராத வகையில், தயாரிப்பு நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது, “எதிர்பாராத சூழ்நிலையால் அகண்டா 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்.”என்று கூறியிருந்தது. 


இந்த அறிவிப்பு, படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில், படத்தின் தள்ளிவைப்பின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. தகவல்களின் படி, தயாரிப்பு நிறுவனம் EROS நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 28 கோடி தொகையை வழங்காத காரணத்தால், படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் படி, பணத்தை சரி செய்யும் முன் படத்தின் வெளியீட்டை முன்னெடுக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, படக்குழு தீவிரமாக பிரச்சினையை சரிசெய்ய முயற்சித்து வருகின்றனர். அத்துடன் , இன்று மாலைக்குள் இந்த வழக்கினைத் தீர்த்துவிடுவதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement