• Dec 19 2025

விஜய் மீண்டும் 2027-ல் நடிப்பார்..! ரசிகர்களைக் குஷிப்படுத்திய ஆதவனின் கருத்து.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார், ரசிகர்களால் "தளபதி" என்று அழைக்கப்படும் விஜய், தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின், பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. அத்துடன், "ஜனநாயகன்" படத்திற்குப் பிறகு, சினிமாவிலிருந்து விலகுவதாகவும், கடைசிப் படம் இதுதான் எனவும் விஜய் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.


இந்நிலையில், ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படமா? அவர் திரும்ப வருவாரா? என ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்து கொண்டிருந்த சமயத்தில், தற்பொழுது தொலைக்காட்சி தொகுப்பாளரான VJ ஆதவன் வெளியிட்ட கருத்துகள் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.


சமீபத்திய பேட்டியில் VJ ஆதவன், "விஜய் பத்தி பேசுனா அவர் படத்துல வாய்ப்பு வராதுனு பயத்தில பேசாம இருப்பாங்க. ஆனா, அவர் சொல்லிட்டார் கடைசி படம்னு. அப்படியே திரும்பி நடிக்க வந்தாலும் ஏன் மறுபடியும் நடிக்க வந்தேன்னு அவர் பதில் சொல்லணும். 

எப்படியும் 2027ல கண்டிப்பா நடிக்க வருவாரு.... வந்திட்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடிக்க வந்தேன் என்று சொல்லுவாரு.." எனத் தெரிவித்திருந்தார். இந்த தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், ஆதவனின் கருத்து ரசிகர்களிடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement