தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பலமொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கியவர் இளையராஜா. இவர் இந்திய சினிமாவின் இசையின் போக்கையே மாற்றினார்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜா 'பத்மபாணி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் எதிர்வரும் 28ஆம் தேதி நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட இசைக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கி வரும் அவரது இசை சேவையை பாராட்டும் வகையிலேயே, இந்த விருது இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கு முன்பும் பல தேசிய விருதுகள் சர்வதேச விருதுகளை பெற்றுள்ள இசைஞானிக்கு, இந்த பத்மபாணி விருது மேலும் ஒரு மகுடமாக அமைய உள்ளது. இசை உலகில் அவருடைய பயணம் இன்னும் தொடர்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்து வருகின்றது.
'பத்மபாணி' அறிவிப்பு வெளியாகியதில் இருந்து திரையுலகினர், இசைக் கலைஞர் மட்டுமின்றி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இளையராஜாவுக்கு தமது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
Listen News!