கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. தமிழில் இருந்தும் தேசிய விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த சர்வதேச தேசிய விருதுக்கு பொன்னியின் செல்வன் பாகம் 1 தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படத்திற்கு மட்டும் மொத்தமாக நான்கு விருதுகள் அளிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் பான் இந்திய வெளியீடாக ரிலீஸ் ஆனது பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பல முன்னணி நச்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டு இருக்கிறது. பொன்னியின் செல்வன் சிறந்த படத்திற்கான விருதினை தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் பெற்றுள்ளார். அத்துடன் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே பாடலுக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான விருது ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ்க்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல் நித்யா மேனனுக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!