• Jan 19 2025

’இந்தியன் 2’ படத்தில் மிஸ் யுனிவர்ஸ் நடித்துள்ளாரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’இந்தியன் 2’ திரைப்படம் இம்மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் காலண்டர் சாங் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்க இந்த பாடலை சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு நடனம் ஆடியவர் மிஸ் யுனிவர்ஸ் டெமி லே டெபோ என்பவர் என்பது தான் ஆச்சரியமான தகவல் ஆகும். 2017 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற இவர் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் உருவான ’முதல்வன்’ திரைப்படத்திலும் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பதும் அதன் பிறகு தற்போது ’இந்தியன் 2’ திரைப்படத்தில் மிஸ் யுனிவர்ஸ் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலில் லிரிக் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் மிஸ் யுனிவர்ஸ் அழகை ஒவ்வொரு ஷாட்டிலும் ஷங்கர் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் ஷங்கரின் பாணியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement