சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அவரது மருமகள் கேரக்டரில் நடித்த நடிகை வித்தியாசமான காஸ்டியூமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடித்து வருபவர் நடிகை மிர்னா மேனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நிலையில், அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் சில வாய்ப்புகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் மிர்னா மேனன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் கிளாமர் காஸ்ட்யூமில் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் ’என்ன சிம்ரன் இது, இவ்வளவு மோசமான காஸ்டியூமில் இருக்கிறீர்கள்’ என்றும் ’காஸ்டியூம் செலவு ரொம்ப மிச்சம் படுத்துகிறார்கள்’ என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகிறது. இருப்பினும் ’இந்த காஸ்ட்யூம் உங்களுக்கு அழகாக இருக்கிறது’ என்றும் ’நீங்கள் சூப்பர் அழகு’ என்றும் சில பாசிட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!