• Jan 19 2025

மாலையுடன் மணக்கோலத்தில் மீரா ஜாஸ்மின்.. அடுத்தது ’பாலும் பழமும்’ என அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை மீரா ஜாஸ்மின் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அடுத்தது 'பாலும் பழமும்’ தான் என்று பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாதவன் நடித்த ’ரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மீரா ஜாஸ்மின் அதன்பின் விஜய்யுடன் ’புதிய கீதை’ அஜித்துடன் ’ஆஞ்சநேயா’ உட்பட பல தமிழ் படங்களிலும் சில மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு கூட அவர் நடித்த ’விமானம்’ மற்றும் ’குயின் எலிசபெத்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் நயன்தாரா நடித்து வரும் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் திருமண கோலத்தில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ’பாலும் பழமும்’ என்ற படத்தின் போஸ்டர் இது என்றும் ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் குடும்ப எண்டர்டெயின்மென்ட் படம் என்றும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் நடிகை மீரா ஜாஸ்மின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த போஸ்டர் போவது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement