• Aug 31 2024

பார்த்திபனின் சிறு பட்ஜெட் படத்திற்கு முன் தோற்று போனதா? ஷங்கரின் பிரமாண்டம்! வசூல் விபரம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வாரமும் நான்கு, ஐந்து படங்களுக்கு குறையாமல் திரையரங்குகளில் புது புது படங்கள் வெளியாகின்றன. குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் சிறு பட்ஜெட்டில் அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் தயங்குவதும் உண்டு.

இதற்கு முக்கிய காரணம் திரையரங்க ஒதுக்கீடு. பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே 75 வீதத்திற்கு மேல் திரையரங்குகள் ஒதுக்கப்படும். அடுத்த படியில் உள்ள நடிகருக்கு 20 தொடக்கம் 25 சதவீதத்தில் ஒதுக்கப்பட்டாலும் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஐந்து வீதம் மட்டுமே திரையரங்குகள் கிடைக்கும்.

அது போல தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கு முன் சிறு பட்ஜெட் படமான டீன்ஸ் படத்தை களம் இறக்கி இருந்தார் பார்த்திபன். இந்த படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் வெற்றியும் கண்டுள்ளார்.


13 சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அறிவியல் நோக்கத்தில் எடுக்கப்பட்டதா? அமானுஷ்யமா? என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் எடுத்துள்ளார். இந்த படம் இந்தியன் 2 அளவுக்கு வசூலை வாரிக் குவிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படம் மற்றும் பார்த்திபனின் டீன்ஸ் படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி இந்தியன் 2 படம் கடந்த மூன்று நாட்களில் 45 கோடியும் உலக அளவில் 130 கோடிக்கும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. டீன்ஸ் படம் கடந்த மூன்று நாட்களில் 1.41 கோடி உலக அளவில் வசூலித்துள்ளதாம்.

Advertisement

Advertisement