தமிழ் சினிமாவில் அறிமுகமாகி யாரும் எதிர்பார்த்திடா வண்ணம் சிறிது காலத்திலேயே முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி எதுவெல்லாம் அவரால் முடியாது என சொல்லபட்டாரோ அதுவெல்லாம் முடியும் என நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.
ரசிகர்களை குடும்பமென கூறும் சிவகார்த்திகேயனின் குடும்பம் பெரியது தான்.விசேட தினங்கள் பண்டிகைகள் என அனைத்துக்கும் வாழ்த்துக்களை மறக்காமல் கூறும் சிவகார்த்திகேயன் தனது வீட்டின் விசேட தினங்களையும் ரசிகர்களுடன் மறக்காமல் பகிர்ந்துகொள்வார்.
அதேபோல் அண்மையில் இடம்பெற்ற அவரது மூன்றாவது மகனது பெயர் சூட்டும் வைபவத்தின் வீடியோவை பகிர்ந்த சிவகார்த்திகேயன் உங்கள் அனைவரது அன்பு மற்றும் ஆதரவோடு தங்களது மகனுக்கு "பவன்" என பெயர் சூட்டியிருப்பதாக ரசிகர்களுக்கு அவ் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
Aaradhana - Gugan - PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024
Listen News!