• Nov 14 2024

மாயா ஒரு கலீஜ்; சக போட்டியாளர்கள் சொன்னது எல்லாமே அப்பட்டமான பொய்! பிரதீப் விஷயத்தில் உண்மையை சொன்ன யுகி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக justice for pradeep  என்ற ஹேஷ் டேக்கே வைரலாகிவருகின்றது. 

பிகா பாஸ் வீட்டில் பெண்களிடம் தவறான அணுகுமுறையில் பழகியது என எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பினார்கள். இவர்களுக்கு ஆதரவாக கமலும் பேசியது இணைய வாசிகளுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பிரதீப் எப்படிப்பட்டவர், பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த யுகேந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

 

பிக் பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்கள் சொன்னது எல்லாமே அப்பட்டமான பொய். பிரதீப் அப்படிப்பட்டவரே இல்ல. வார்த்தையால அப்படி பேசுவாரே தவிர உடல் ரீதியா எந்த அச்சுறுத்தலும் நான் இருந்த வரை அவர் பண்ணியதில்ல. அதிலும் அவர் சிறுவயதில இருந்தே கெட்ட வார்த்தைகள கேட்டு கேட்டு வளர்ந்திருக்கிறார். அதனாலதான் அந்த வார்த்தைகள பேச அவர் தயங்கவில்லை. ஆனால் உடல் ரீதியாகவோ பாலுணர்வ தூண்டும் விதமாகவோ பிரதீப் அப்படி நடந்து கொள்ளவும் இல்லை. நடக்கவும் மாட்டார் என்பதே என் நம்பிக்கை. மேலும் நடு ராத்திரியில் தூங்காமல் வெறிக்க வெறிக்க பார்க்கிறார் என்றெல்லாம் புகார் வந்தது.

ஆனால் உண்மையிலேயே இரவு நேரத்தில் பிரதீப் தூங்க கொஞ்சம் கஷ்டப்படுவார். அதுவும் அங்கு கொசுத்தொல்லைகள் கொஞ்சம் அதிகம். அதனால் வெளியே போய் நடந்து கொண்டிருப்பார். அதையும் மீறி சில நேரம் பிரதீப் அசந்து தூங்கினாலும், அங்கு இருக்கிற இளஞ்ஜோடிகள் சமையலறையில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.


ஒரு வேளை பிரதீப் மீண்டும் வீட்டிற்குள் போக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு யுகேந்திரன் 'தயவு செய்து வேண்டானுதான் சொல்வேன். இது ஒரு மாஸ் எக்ஸிட் அவருக்கு. வெளியே வந்த பிறகு கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். அதையும் மீறி போனால் முதல் இடத்தைத்தான் பிடிக்க வேண்டும் பிரதீப்' என்று யுகேந்திரன் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் அதிகமான கெட்ட வார்த்தைகளை பிரதீப்பை விட ரொம்பவும் பேசியது மாயாவும் பூர்ணிமாவும்தான் என்றும் மாயா ஒரு கலீஜ் என்றும் பூர்ணிமாவை ஸ்லோ பாய்ஸன் என்றும் பூர்ணிமாவை இந்த வாரம் எலிமினேட் செய்தால் கண்டிப்பாக வீட்டிற்குள் ஒரு கேம் சேஞ்ச் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் யூகேந்திரன் கூறினார்.

மேலும், அர்ச்சனா மாயாவுக்கு ஒரு பெரிய டஃப் ப்ளேயராக மாறும் போது இன்னும் வரும் காலங்களில் இந்த விளையாட்டு இன்னும் விறுவிறுப்பாக போகும் என்றும் யுகேந்திரன் கூறினார்.


Advertisement

Advertisement