தமிழ் சினிமா உலகில் தனித்துவமான கதை சொல்லும் இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். அவரது படைப்புகள் மட்டும் இல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களும், அரசியல் மற்றும் சமூகப் பின்னணியோடு கலந்த உரையாடல்களும் ரசிகர்களின் மனதை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பேட்டி தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆரம்பகால அனுபவங்களைப் பற்றி பேசுகையில், “நான் 6,7 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அந்த வயதிலேயே சுவரில் `வாழ்க.. வெல்க’ என எழுத ஆரம்பித்து விட்டேன். அரசியலை விட்டு சினிமாவுக்கு வந்தவன் தான் இந்த மாரி செல்வராஜ்” என்று மனம் திறந்து கூறியுள்ளார்.
இதன் மூலம், மாரி செல்வராஜ் ஆரம்பகாலத்தில் அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், மாரி செல்வராஜ் தனது அரசியல் பின்புலத்தை சினிமாவில் கையாளும் விதம் தனித்துவமானதாகும். கதை, இயக்கம், காட்சிகள் அனைத்தும் சமூக உணர்வுடன் கூடியவை. இது அவரை புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு உதாரணமாக்கியுள்ளது .
Listen News!