தமிழ் திரையுலகம் எப்போதும் புதுப்பெயர்கள், புதிய திறமைகள் மற்றும் புதிய சாதனைகளால் நிரம்பி இருப்பது உண்மை. ஆனால் அந்த உலகின் மீது எப்போதும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் ஒன்று என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது மறுக்க முடியாத உண்மை.

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறிய ஒரு கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
செய்தியாளர் சந்திப்பின் போது, ஒருவர் லதா ரஜினிகாந்திடம், “இப்போது இருக்கும் நடிகர்களில் யாருக்கு அதிக மவுசு இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு லதா ரஜினிகாந்த், “No Comments.”என்று பதிலளித்திருந்தார். அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!